X Close
X
8825830932

க ராமநாதபுரத்தில் சர்வதேச குடும்ப தின விழா


87108-d2214e87-e674
Salem:

May 16

கெங்கவல்லி அருகே கடம்பூர் ராமநாதபுரத்தில் உலக குடும்ப தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் பங்கேற்ற அரசுப்பள்ளி தலைமையாசிரியர் முனைவர்.என்.டி.செல்வம் பேசியதாவது: ஒவ்வொருவரும் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கத்துடன் ஐ.நா.சார்பில் மே- 15 ஆம் தேதி உலக குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது.

1992-ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குடும்ப தினத்தைப் பிரகடனப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறது. உலக குடும்ப தினம் கொண்டாடப்படுவதற்கான நோக்கங்களான எந்த சூழ்நிலையிலும், எந்த வயதிலும், யாரும் குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்றும், குடும்பங்களுக்கிடையே சமத்துவத்தை வளர்க்கவும், வீட்டு பொறுப்புகள், தொழில்வாய்ப்புகள், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் குடும்பங்களின் பங்களிப்பை உணர்த்தவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

குடும்பங்களின் சுயநம்பிக்கையை வளர்த்து துன்பங்களை சகிப்புடன் எதிர்கொண்டு புத்துணர்ச்சியோடு செயல்பட தூண்டுவதையும் இதுபோ‌ன்ற மக்களின் இயல்புச் சக்திகளை மேலோங்கச் செய்வதையும் இத்தினம் வலியுறுத்துகிறது.

பால் இன வேறுபாடு இன்றி மக்களிடையே சமத்துவத்தை பேணி வளர்ப்பதையும், பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதையும் இந்த தினம் வலியுறுத்துகிறது.

மேலும் குடும்பத்தை சமத்துவத்தோடு நடத்துவது, குடும்ப வன்முறையை தடுத்தல் போன்ற விழிப்புணர்வை குடும்பங்களில் ஏற்படுத்தவே "சர்வதேச குடும்ப தினம்" கொண்டாடப்படுகிறது என்று பேசினார்.

விழாவில் பங்கேற்ற குடும்பத்தினர்கள் ஒருவருக்கொருவர் மலர்க்கொத்துக்கள் கொடுத்து உலக குடும்ப தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

CFCM News

(Centre for Community Media)

CFCM