X Close
X
8825830932

பருவ நிலை மாற்றத்தினை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார மேம்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு


87108-331b1155-c7ee
Salem:

June 21

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தென் மேற்கு பருவ மழையினால் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தினை கருத்தில் கொண்டு, கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 56 செங்கல்பட்டி 3 வது தெரு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார மேம்பாட்டு பணிகளை 21.6.2018 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் த. ரோஹிணி. ரா. பாஜிபாகரே, அவர்கள் ஆய்வு செய்தார்.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு உரிய அளவில் உள்ளதா என்பதை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் குடிநீர் விநியோகம் தொடர்ந்து முறையாக வழங்கப்படுகிறதா என்பதையும், குறிப்பிட்ட இடைவெளியில் குடிநீர் வழங்கப்படுவதால் பொதுமக்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப குடிநீரை சேகரித்து வைக்க வேண்டும் எனவும், தங்கள் வீட்டுப்பகுதிகளை தூய்மையாக பராமரித்திட வேண்டும் எனவும் அறிவுருத்தினார்.

மேலும் மாநகராட்சியின் சார்பில் களப்பணிகளை மேற்கொண்டு வரும் களப்பணியாளர்கள் , பரப்புரையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் சுகாதார மேம்பாட்டு பணிகளை முறையாக மேற்கொண்டு வருகிறார்களா என்பதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார்.

இவ்வாய்வின்போது செயற்பொறியாளர் ஆர்.ரவி, மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், மருத்துவ அலுவலர் மரு.ஆர்.ஜி.ராமச்சந்திரன், உதவி ஆணையாளர் ம. சுந்தரராஜன், உதவி செயற்பொறியாளர் ஆர். செந்தில்குமார், உதவி பொறியாளர் ஜெ.ஓபுளி சுந்தர், சுகாதார அலுவலர் எம். சேகர், சுகாதார ஆய்வாளர்கள் கே. சித்தேஸ்வரன், எ. கோபிநாத் , டி. ஆனந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

CFCM News

(Centre for Community Media)

CFCM