X Close
X
8825830932

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை குறித்துகூட்டம் மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது-


87108-3e272e69-8dc8
Salem:

September 5

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (05.09.2018) வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரோஹிணி ரா.பாஜிபாகரே, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: வடகிழக்கு பருவமழை காலங்களில் கடந்தகால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

சுகாதாரத்துறை நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் போதிய அளவில் நோய்தடுப்பு மருந்துகள் இருப்பில் வைத்திருக்க வேண்டுமெனவும், ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுபாட்டில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் குளோரினேசன் செய்திட வேண்டுமெனவும், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டை, ஏரி ஆகியவற்றின் நீர் இருப்பு விவரம் குறித்த தினசரி அறிக்கையினை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சியின் சார்பில் அனைத்து பகுதிகளில் குப்பைகள் தேங்காத வண்ணம் பார்த்துகொள்ள வேண்டும். மாநகராட்சி சாலைகளில் பழுது இருப்பின் அதனை நிவர்த்தி செய்திட வேண்டும். பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்களின் உறுதித்தன்மையினை கண்டறிந்து உடனடி அறிக்கை அனுப்பி வைக்க வேண்டுமெனவும், சிறு பழுதுகள் இருப்பின் உடனடி நிவர்த்தி செய்திட வேண்டும். மீன்வளத்துறையின் சார்பில் படகுகள் மற்றும் அதனை இயக்குபவர்கள் குறித்த விவரம் மற்றும் மீனவர்களின் விவரத்தினை மாவட்ட நிர்வகத்திற்கு அனுப்பி வைக்கவும், தீயணைப்புத்துறையின் சார்பில் உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் குடிநீர் குழாய் இணைப்புகளில் மழைநீர் கலந்திட வண்ணம் பார்த்துக் கொள்ளவும், நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளின் உறுதித்தன்மை குறித்த ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் நீர் இருப்பு விவரம் குறித்த அறிக்கையினை அனுப்பி வைக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் ‘1077’ என்ற கட்டமில்லா தொலைபேசி எண்ணிலோ, மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் அறை எண்.132ல் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை அலுவலக 0427-2452202 என்ற தொலைபேசி எண்ணிலோ 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரோஹணி ரா.பாஜிபாகரே, அவர்கள் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் திரு.பெரியசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி.வந்தனா கார்க், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) .சி.விஜய்பாபு, வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் தராஜேஷ் குமார், சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

CFCM News

(Centre for Community Media)

CFCM