X Close
X
8825830932

பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும் இயக்கத்தின் செயல்பாடுகளை ஆணையாளர் துவக்கி வைத்தார்-


87108-e6573e24-1ea3
Salem:

Feb 24

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும் இயக்கத்தின் செயல்பாடுகளை, 24.02.2019 அன்று கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 51-ல் ரங்காபுரம் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் அவர்கள் துவக்கி வைத்தார்.

சேலம் மாநகர பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை அறவே தவிர்க்கும் பொருட்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், தேசிய மாணவர் படை மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரை பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும் இயக்கமாக மாற்றியமைத்து, இவ்வியக்கத்தை கொண்டு நீரோடைகளில் உள்ள பிளாஸ்டிக்களை அகற்றும் பணிகளையும், மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை துவக்கி வைத்த ஆணையாளர், பின்னர் பேசியதாவது:- பின்னர் பேசியதாவது:-

சேலம் மாநகராட்சி பகுதிகளில் நாள் 1 க்கு 350 லிருந்து 400 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் 30 லிருந்து 40 சதவீதம் வரை பிளாஸ்டிக் போன்ற உலர் கழிவுகள் கலந்துள்ளது. பிளாஸ்டிக் போன்ற திடக்கழிவுகளை சேகரிப்பதற்கென்று 4 மண்டலங்களில் உலர் கழிவு சேகரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தில் 05.06.2018 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், சட்டமன்ற பேரவை விதி எண் 110 -ன் கீழ், சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை 01.01.2019-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தடை செய்வதாக அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை / விற்பனை செய்வதை தடுக்க, சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 5 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, மரவள்ளிக்கிழங்கு மற்றும் மாக்காச் சோள மாவிலிருந்து தயாரிக்கப்படும் மக்கும் தன்மை கொண்ட பைகள், வாழை இலை, பாக்கு மர இலை, காகிதச்சுருள், தாமரை இலை, கண்ணாடி, உலோகத்தாலான கப்புகள், மரச்சாமன்கள், மூங்கில், காகித உறிஞ்சு குழாய்கள், துணி, காகிதம், சணல் பைகள், மண் குவளைகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவது குறித்த அனைத்து விவரங்களும் பொதுமக்கள் வணிக நிறுவனங்களுக்கும், வணிக சங்கத்தினருக்கும் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

பிளாஸ்டிக் அல்லாத மக்கும் தன்மை கொண்ட பைகள் மற்றும் பிற பொருட்கள் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மாநகராட்சி நிர்வாகத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இனி வருங்காலங்களில் இவ்வியக்கத்தின் மூலம் பொது இடங்கள், வழிபாட்டுத்தளங்கள், நீர்நிலைகள், சாலைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக்களை அகற்றும் பணிகள், மரக்கன்றுகள் நடும் பணிகள் மாநகராட்சி பகுதிகள் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என ஆணையார் தெரிவித்துள்ளார்.

CFCM News

(Centre for Community Media)

CFCM