X Close
X
8825830932

துணை வேளாண் அலுவலர் இன்று அவரது வீட்டிலையே தூக்கிட்டு தற்கொலை -


Salem:

துணை வேளாண் அலுவலர் இன்று அவரது வீட்டிலையே தூக்கிட்டு தற்கொலை .

சிறந்த முறையில் பணியாற்றி வந்த சிவகுமாரை இடமாறுதல் செய்தாலும் பணிச்சுமை கொடுத்த காரணத்தினாலும் தற்கொலை செய்து கொண்டதாக நண்பர்கள் குற்றச்சாட்டு..........

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே பாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் இவருக்கு இந்திரா என்ற மனைவியும் விஜயன் என்ற ஒரு மகனும் உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக வேளாண்துறையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம் ஆட்டையாம்பட்டி என்ற பகுதியில் உதவி வேளாண் அலுவலர் பணியாற்றி வந்த நிலையில் விழுப்புரத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டிருந்தார்.

இந்த பனி மாறுதல் விருப்பம் இல்லாத காரணத்தால் காரணத்தினால் அங்கு வேலை செய்ய விருப்பம் இல்லாததால் தனது செல்வாக்கை பயன்படுத்தி விழுப்புரம் மாவட்ட பனி மாறுதலை நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் துணை வேளாண் அலுவலராக பணி மாறுதல் பெற்றார். இதனை தொடர்ந்து 15 நாட்களாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் வீட்டின் அருகே உள்ள மரத்தின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட மனைவியும், மகனும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த மல்லூர் காவல் துறையினர் சிவகுமாரின் பிரேதத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவக்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவருடன் பணிபுரிந்த சக நண்பர்களுக்கும் அறிந்து மருத்துவமனையில் திரண்டனர். அவருடைய உடலை கண்டு நண்பர்களும் சக ஊழியர்களும் கதறி அழுதனர். இதனால் மருத்துவ மனை வளாகம் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து இறந்த சிவகுமாரின் நண்பர்கள் கூறும் போது, நல்ல முறையில் சிறப்பாக பணியாற்றி வந்த இவருக்கு பணிமாறுதல் செய்தது மன வேதனையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்பொழுது வேலை செய்யும் வெண்ணந்தூர் அலுவலகத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு முடிக்காமல் நிலுவையில் இருந்த பணிகள் உடனே முடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதாலும், அதிகாரிகள் அழுத்தம் காரணமாகவும் மனமுடைந்த தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்தனர். நன்கு பணிபுரிந்து வந்த சிவகுமாரை அதிகாரிகள் தொடர்ந்து அழுத்தம் குடுத்ததே அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளி உள்ளது என்றும் இதனால் மனமுடைந்த சிவகுமார் இந்த செயலை எடுத்தது மிகுந்த வேதனையை ஏறபடுத்தி உள்ளது இதே போல அலுவலகத்தில் பல்வேறு தரப்பினர்களுக்கும் வேலை பளு அதிகாமாக உள்ளது என்றும் தெரிவித்தனர்.

சிவக்குமார் 25 ஆண்டுகள் சிறந்த முறையில் வேளாண் துறையில் பணியாற்றியதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர். பேட்டி: பழனிச்சாமி நண்பர்கள்

Centre for Community Media

CFCM