X Close
X
8825830932

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள அனைவரும் பொதுத் தேர்தலுக்கான ஜனநாயக திருவிழாவில் வாக்கினை தவறாமல் செலுத்திட வேண்டும்: சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்


87108-eff975f4-4cfd
Salem:

இதுகுறித்து சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரோஹிணி ரா.பாஜிபாகரே, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2019 முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செடீநுயும் வண்ணம் மாவட்ட தேர்தல் அலுவலகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செடீவது குறித்தான விழிப்புணர்வு, நேர்மையான வாக்களித்தலை வலியுறுத்துதல், முதல்முறை வாக்களிக்கவுள்ள இளம் வாக்காளர்களை வாக்களிக்கும் வகையில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிட ஊக்கப்படுத்துதல், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எளிய முறையில் அணுகும் வண்ணம் மற்றும் தடைகள் இல்லாத வகையில் உரிய வசதிகளை செடீநுது தருவதன் மூலம் வாக்களிப்பதை உறுதி செடீநுதல், மகளிர்கள், முதியோர்கள், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள் ஆகிய வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்தல் ஆகியன குறிப்பிடத்தக்க ஒரு சில நடவடிக்கைகள் ஆகும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், காவல் பணியாளர்கள் அனைவரும் அவர்கள் வாக்களிக்கும் தொகுதியல்லாது மற்ற தொகுதியில் தேர்தல் பணி இருந்தால் தபால் வாக்குச் சீட்டு (ஞடிளவயட க்ஷயடடடிவ ஞயயீநச) வழங்கியும், அவர்கள் வாக்களிக்கும் தொகுதியிலேயே தேர்தல் பணியில் இருந்தால் அங்கேயே வாக்களிக்க ஏதுவாக தேர்தல் பணிச்சான்று (நுடநஉவiடிn னுரவல ஊநசவகைiஉயவந) வழங்கியும், அவர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செடீநுயும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலகம் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இன்று வரை தேர்தல் பணி அலுவலர்கள் மற்றும் காவல் பணியாளர்கள் 11,762 தபால் வாக்குகளை பதிவு செடீநுதுள்ளனர்.

மேலும், 4,556 தேர்தல் பணியாளர்களுக்கு அங்கேயே வாக்களிக்க ஏதுவாக தேர்தல் பணிச்சான்று (நுடநஉவiடிn னுரவல ஊநசவகைiஉயவந) வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து தேர்தல் பணி அலுவலர்கள், காவல் பணி அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், தேர்தல் பணியாற்றும் பறக்கும்படை முதலான பல்வேறு குழு உறுப்பினர்கள், ஓட்டுநர்கள், நேரடி ஒளிபரப்பு பணியாளர்கள் (றுநb ஊயளவiபே ளுவயகக) மற்றும் நுண்பார்வையாளர்கள் (ஆiஉசடி டீளெநசஎநச) அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செடீநுயும் விதமாக அனைத்துத் துறை தலைவர்கள், தபால்துறை மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆகியோர்கள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து வாக்காளர்களும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் பதியப்பட்டுள்ளதை உறுதி செடீநுது கொள்ளவும், வாக்காளர் பதிவு தொடர்பான தங்களது சந்தேகங்களை வாக்காளர் சேவை மைய தொலைபேசி எண்.1950-இல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும், சி-விஜில் (உ-ஏபைடை ஹயீயீ)-ஐ பதிவிறக்கம் செடீநுது தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம். எனவே, 18 வயது நிரம்பிய, வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள அனைவரும் வருகின்ற 18.04.2019 அன்று நடைபெறுகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான ஜனநாயக திருவிழாவில் பங்கேற்று தங்களின் வாக்கினை தவறாமல் செலுத்தி ஜனநாயகக் கடமையை முழுமையாக நிறைவேற்றிடவும் நமது ஜனநாயகத்தை வலுப்படுத்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CFCM News

(Centre for Community Media)

CFCM