X Close
X
8825830932

அ- புதூர் கிராம ஊராட்சிக்கு 2016-2017 ம் ஆண்டிற்கான நானாஜி தேஷ்முக் ராஸ்டிரிய கௌரவ் கிராம சபா புரஸ்கார் விருது-


87108-cfb7e053-308b
Salem:

May 29

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அ. புதூர் கிராம ஊராட்சி 2016-2017 ம் ஆண்டிற்கான ``நானாஜி தேஷ்முக் ராஸ்டிரிய கௌரவ் கிராம சபா புரஸ்கார்” என்ற விருது கிடைத்துள்ளமை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, அவர்களிடம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் நா.அருள்ஜோதி அரசன் அவர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ந.கோபிநாத் அவர்கள் ஆகியோர் 28.05.2018 விருதினை நேரில் காண்பித்து வாடிநத்துப் பெற்றனர்.

2016-2017 ம் ஆண்டுக்கான சிறந்த செயல்பாடுகள், மக்கள் பங்கேற்புடன் சீரிய நிர்வாகம், புதுமையான முறையில் பணிகள், ஆகியவற்றிற்கு இந்திய அரசு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் சிறந்த கிராம ஊராட்சிக்கு வழங்கப்படும் விருதான ``நானாஜி தேஷ்முக் ராஸ்டிரிய கௌரவ் கிராம சபா என்ற விருதிற்கு சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம், அ. புதூர் கிராம ஊராட்சி தேர்வு செயப்பட்டு கடந்த 24.4.2018 அன்று மத்திய பிரதேசம் மாநிலம், ஜபல்பூர்ரில் மாண்புமிகு பாரத பிரதமர் ம நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

இந்த விருதிற்கு தமிடிநநாடு மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு கிராம ஊராட்சி சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம், அ. புதூர் கிராம ஊராட்சி என்பது குறிபிடத்தக்கது. இந்த விருதினை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் பிரதிநிதியாக ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) .ந.கோபிநாத் அவர்களால் மத்திய பிரதேசம் மாநிலம், ஜபல்பூர்ரில் நடைபெற்ற விழாவில் கடந்த 24.4.2018 அன்று பெற்றுகொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து இவ்விருதினை மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சித்தலைவர் தரோஹிணி ரா.பாஜிபாகரே, அவர்களிடம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திரு.நா.அருள்ஜோதி அரசன் அவர்கள், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.ந.கோபிநாத் அவர்கள், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் .தமிடிநசெல்வன் மற்றும் அ. புதூர் கிராம ஊராட்சி செயலாளர் பி.முத்து ஆகியோர் விருதினை நேரில் காண்பித்து வாடிநத்துப் பெற்றனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ந்து இந்த ஊராட்சி மக்கள் பணியில் சிறப்பாக செயல்படுவதோடு தொடர்ந்து இவ்விருதினை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக மேற்கொள்ள வேண்டுமெனவும், சேலம் மாவட்டத்தில் உள்ள மற்ற ஊராட்சிகளும் இதுபோன்ற விருதுகளை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுரை வழங்கியதோடு தமிழகத்திலையே சிறந்த ஊராட்சியாக தேர்வு செயப்பட்டு மாண்புமிகு தமிடிநநாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழக அரசிற்கும், சேலம் மாவட்டத்திற்கும் பெறுமை சேர்த்துள்ள சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம், அ. புதூர் கிராம ஊராட்சிக்கும், அதர்காக சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கும்

பொதுமக்களுக்கும் எனது பாராட்டுக்களையும் வாடிநத்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

இந்நிகடிநச்சியில் மாவட்ட வருவாடீநு அலுவலர் டாக்டர்.இரா.சுகுமார், சமூக பாதுகாப்புத்திட்ட தனி துணை ஆட்சியர் சாரதா ருக்மணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெகநாதன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள்  உடன் இருந்தனர்.

CFCM