சேலம் December 14
சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியைச் சார்ந்த முருகேசன் – மாதேஸ்வரி ஆகியோருடைய மகன் சிபிகேசன். பத்து வயது சிறுவனான இவர் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். தந்தையை இழந்த சிறுவன் சிபிகேசனுக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். இவரது தாயார் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை வீட்டின் அருகே உள்ள அரசு கலைக் கல்லூரி வளாகத்தின் பின்புறத்தில் இருக்கும் கிணறு ஒன்றில் மீன் பிடிப்பதற்காக, சிபிகேசன் தன் நண்பர்கள் இருவருடன் சென்றுள்ளார். இந்நிலையில் கிணற்றின் ஓரத்தில் நின்று மீன் பிடித்த்துக்கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக, கிணற்றுக்குள் சறுக்கி விழுந்தான். இதனை கண்ட சக நண்பர்கள் சிபிகேசனை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். அப்போது சத்தம் கேட்டு ஓடி வந்த கல்லூரி மாணவர்கள், இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால் சிறிது நேரத்திலேயே தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான். பின்னர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றுக்குள் இருந்த சிறுவனை சடலமாக மீட்டனர்.சிறுவனின் உடலை கண்டு, உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் அந்த இடம் சோக மயமானது. இதனையடுத்து அஸ்தம்பட்டி காவல் துறையினர், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். பேட்டி ; அரசு கலைக்கல்லூரி மாணவன்.
CFCM News
(Centre for Community Media)