X Close
X
8825830932

சேலம் தாஜ்மஹாலில் இஸ்லாமிய துறவிகள் வழிபாடு-


87108-0161acd1-ae24
Salem:

April 29

சேலம் அம்மாபேட்டை சிங்க மெத்தை பகுதியில் அமைந்துள்ள குருபீபீ அம்மாள் சத்திரம் அமைந்துள்ளது.

இந்த சத்திரத்தில் குருபீபீ அம்மா வின் சமாதி தர்கா அமைந்துள்ளது.இந்த இடம் குருபீபீ அம்மாவிற்கு அவரது காதல் கணவரான ஆங்கிலேயரான சேலம் ஜமீன்தார் ஜார்ஜ் பிரெட்ரிக் பிஷர் என்பவரால் குருபீபீ அம்மமாவின் மரணத்தின் பிறகு சமாதி அமைவதற்காக கொடுக்கப் பட்டது.

அதன்படி ஏறத்தாழ 1 1/2 ஏக்கர் நிலத்தில் மையத்தில் அமைந்த சமாதியை பாராமரிக்க இந்த நிலத்தின் வருமானம் பயன்படுத்தப்படவேண்டும் என்றும் ஆண்டிற்கு ஒருமுறை குருபீபீ அம்மா நினைவுநாளில் இஸ்லாமிய சூப்பி (Sufi saints) துறவிகளை வரவழைத்து பிரார்த்தனைகள்( தூவா)செய்து அவர்களால் சமய சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் ஜமின்தார் தனது மனைவியின் மரணத்திற்கு பிறகு குருபீபீ என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சேலம் வரலாற்றின் காதல் கதை என்று சொல்லப்பட்ட இவர்களின் காதல் சின்னம் இந்த குருபீபீ சமாதி தர்கா ஆகும். ஆங்கிலேயரான ஜமின்தார் தனது மனைவியான குருபீபீ இஸ்லாமிய முறைபடி வாழவும் அவரது மரணத்தின்பின்பு தர்கா பாணியில் சமாதி அமையவும் இந்த இடத்தை பரிசாக (Bequeath)அளித்திருந்தார்.

சமயம் கடந்த இவர்களின் காதல் வாழ்வு சேலம் வரலாற்றில் ஒரு காதல் கதை. இப்படியான இந்த வரலாற்றின் பின்னனியில் அமைந்த இந்த தர்காவில் 28 4 2019 ஞாயிறு மாலை குருபீபீ அம்மா வின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.இந்த சமாதி தர்காவை பராமரிக்கும் குருபீபீ மக்கான் டிரஸ்ட் நிர்வாகிகள் இந்த நினைவு நாள் பிராத்தனைக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்காக சூபி இஸ்லாமிய துறவிகள் ஆந்திர மாநிலம் அனந்த பூர் மாவட்டம் பெனுகொண்டலா தாலுக்காவிலிருந்து வந்திருந்தனர்.இந்த அனுசரிப்பில் குருபீபீ மக்கான் டிரெஸ்ட் நிர்வாகிகள் திருமதி.ஷாகிதா,திரு.சல்மான்,திரு.சாதிக்,திரு.பிரேம் நசீர் முன்னிலை வகித்தனர்.சேலம் வரலாற்றுச் சங்கம் சார்பாக பொதுச் செயலாளர் திரு.பர்னபாஸ், உறுப்பினர்கள் திரு.அச்சன் குஞ்சு,திரு.ஜேம்ஸ் ரத்தினம் ஆகியோர் க லந்துகொண்டனர்.குருபீபீ அம்மா சமாதி தர்காவிற்கு பச்சை போர்வை போர்த்தப்பட்டு ,சந்தனம் வைக்கப்பட்டு,மலரஞ்ச லி செலுத்தப்பட்டது.

நன்றி சேலம் வரலாற்றுச் சங்கம்.

CFCM