X Close
X
8825830932

சேலம் மாவட்டம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் 90-64சதவீதம் பெற்றுள்ளது-


87108-2732f089-da14
Salem:

April 19

சேலம் மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி மார்ச் 19ம் தேதி முடிவடைந்தது. இன்றைய தினம் (19.04.2019) தமிழக பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 18,197 மாணவர்களும், 21,025 மாணவிகளும் என மொத்தம் 39,222 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வில் 16,132 மாணவர்களும், 19,417 மாணவிகளும் என மொத்தம் 36,882 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சேலம் மாவட்டத்தில் மாணவர்கள் 88.65 சதவீதமும், மாணவிகள் 92.35 சதவீதமும் என சேலம் மாவட்டத்தில் மொத்தம் 90.64 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர்கள் மாணவர்களைவிட 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளின் எண்ணிக்கை 138 ஆகும். அதில் தேர்வெழுதியவர்களின் எண்ணிக்கை 19,150. தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 16,333 ஆகும். தேர்ச்சி சதவீதம் 85.29 ஆகும். தேர்வெழுதியவர்களின் எண்ணிக்கை - 107. தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை - 93. தேர்ச்சி பெற்றவர்கள் 86.91 சதவீதம் (கடந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதம் - 71.18 சதவீதம்). இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரோஹிணி ரா.பாஜிபாகரே, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Photo Caption: Salem Chief Education Officer (3 rd from left) releases +12 Public Exam result

CFCM News

(Centre for Community Media)

CFCM