X Close
X
8825830932

பட்சிளம் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம்: நாமக்கல் மாவட்ட இணை இயக்குனர் சிபிசிஐடி அலுவலகத்தில் விளக்கம் -


87108-257ad10d-c322
Salem:

May 4

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஓய்வு பெற்ற செவிலியர் பட்சிளம் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் மற்றும் போலியாக பிறப்பு சான்றிதழ் தயாரித்தது குறித்தும் நாமக்கல் மாவட்ட இணை இயக்குனர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் .சுமார் இரண்டு மணி நேரமாக விசாரணையில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதால் பரபரப்பு.

ராசிபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற செவிலியர் பச்சிளம் குழந்தைகளை பெற்றோர் இடத்திலிருந்து முறைகேடாக பெற்று போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்து லட்சக்கணக்கில் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட செவிலியர் உள்ளிட்ட 9 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குழந்தைகளுக்கு போலியான முறையில் பிறப்புச் சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது இதனை அடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ரமேஷ் சிபிசிஐடி காவல் துறையில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்து குறித்து இணை இயக்குனர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனருக்கு சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர் இதனையடுத்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் ரமேஷ் இன்று காலை 11 மணி அளவில் சேலத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலத்திற்கு வந்தார். அவரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் சுமார் 2 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த இணை இயக்குனர் ரமேஷ் கூறும்போது தான் கொடுத்த புகார் குறித்து காவல்துறையினர் விளக்கம் கேட்டதாகவும் தனக்கு தெரிந்தவற்றை விரிவாக தெரிவித்துள்ளதாகவும் போலிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது குறித்து அதற்கான விவரங்களையும் சிபிசிஐடி காவல்துறையினர் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார் ஏற்கனவே இதுகுறித்து துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் இணை இயக்குனர் தெரிவித்தார்.

CFCM News

(Centre for Community Media)

CFCM