X Close
X
8825830932

முதலமைச்சரின் செய்தியாளர் பேட்டி கேள்வி


87108-32130e90-f24a
Salem:

 மத்திய அரசு விருது கொடுத்திருக்கிறது, ஆனால் திரு.பொன் ராதாகிருஷ்ணன் பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறியிருக்கிறது என்று மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறாரே?

பதில்: இன்று காலையில் ஊடகத்தின் வாயிலாக எங்களுடைய மீன்வளத் துறை அமைச்சர் அவர்கள் அழகாக பதில் சொல்லியிருக்கின்றார். கேள்வி : முதலமைச்சரின் கருத்து என்ன? பதில்: அதுதான் என்னுடைய கருத்து.

கேள்வி : தீவிரவாதிகள் ஊடுருவல் இப்பொழுது அதிகமாகியிருக்கிறது, குறிப்பாக, திரு.நெல்சன் சுட்டுக் கொல்லப்பட்டது, அதேபோல எல்லைகளை பாதுகாக்க எதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? பதில்: எல்லைகளில் எல்லாம், கடல் வழியாகவும், தரை வழியாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, இன்றைக்கு தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாக 2 நிலவிக் கொண்டிருக்கின்றது. இதை சிலர் சீரழிக்க முயற்சிக்கின்றார்கள், அதை அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து ஒடுக்கி, தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக விளங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

கேள்வி : தலைவர் தேர்தலில் பல்வேறு முறைகேடு நடந்ததாக ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறிக் கொண்டிருக்கிறாரே?

பதில்: ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்கள் சேலம் மாவட்டத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் சென்று, மக்கள் பார்க்கின்ற அளவிற்கு ஊடகத்திலும், பத்திரிகையிலும் வெளிப்படுத்தினீர்கள், எந்த இடத்தில் சேலம் மாவட்டத்தில் தவறு நடந்திருக்கிறது? இந்த மாவட்டத்தில் எந்தவித தவறும் நடக்கவில்லை. உதாரணத்திற்கு நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்பாக போட்டியிட்ட 2 கவுன்சிலர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தார்கள். ஒரு கவுன்சிலர் 11 வாக்குகள் வித்தியாசத்திலும், இன்னொருவர் 17 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி வாய்ப்பை இழந்தார்கள். எங்களுடைய மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய சேலம் மாவட்ட கவுன்சிலராக போட்டியிட்டவரும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதேபோல ஆத்தூர் மாவட்ட கவுன்சிலராக போட்டியிட்டவரும் வெகு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏற்காடு ஒன்றியத்தில் போட்டியிட்ட மாவட்ட கவுன்சிலரும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆகவே, இந்தத் தேர்தல் நியாயமாக, முறையாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டிருக்கின்றது. அதுவும், தேர்தல் அதிகாரிகள்தான் வாக்கு மையங்களில் வாக்குகளை எண்ணுகின்றார்கள், அங்கு பலத்த பாதுகாப்பை தேர்தல் ஆணையம் ஏற்பாடு 3 செய்திருக்கின்றது. தடுப்பு அமைக்கப்பட்டு தடுப்புக்கு வெளியிலே தான் எல்லா முகவர்களும் இருந்து வாக்குச் சீட்டுகளைப் பார்த்து எந்தெந்த வாக்குகள் யார், யாருக்கு விழுந்திருக்கிறது என்ற அந்த விவரத்தைக் காட்டி, அதிகாரிகள் அந்தந்த பெட்டிகளில் போடுகின்றார்கள். ஆகவே, இதில் எந்தவித முறைகேடு நடைபெறுவதற்கும் வாய்ப்பில்லை. ஏதாவது ஒரு குறை சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் வேண்டுமென்றே திட்டமிட்டு, அவர்கள் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட்டார்கள். காலையில் 8 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 8 மணி வரையிலும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது. அதுவும் நின்றுகொண்டே, அரசு அதிகாரிகள் வாக்குகளை முறையாக எண்ணினார்கள். முகவர்கள் ஏதாவது சந்தேகத்தை எழுப்பினால், அதற்கு தீர்வு கண்ட பிறகு தான் அந்தந்த வாக்குப் பெட்டிகளில் அந்த வாக்கை அளிக்கிறார்கள். அப்படி இருக்கின்ற காரணத்தினால்தான், காலதாமதம் ஏற்பட்டது. இதில் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை, எந்த இடத்திலும் அப்படிப்பட்ட தவறு நடைபெற்றதாக செய்தி வரவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சித் தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களும், அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களும் இப்படி பரப்பி வருகிறார்கள். நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெரிய வெற்றியைக் கண்டிருக்கின்றது.

கேள்வி: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் பி.ஏ. மரணம் தொடர்பாக சிபிஐ, தமிழக காவல் துறையிடம் விளக்கம் கேட்டிருக்கிறது, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணை அறிக்கை கிடைத்த பின்புதான் அதற்கு பதில் சொல்ல முடியும். கேள்வி: சூஞசு மற்றும் சூசுஊ குறித்து ...

பதில்: சூஞசு, சூசுஊ இரண்டும் வெவ்வேறு. சூஞசு என்பது தேசிய மக்கள் தொகை பதிவேடு, சூசுஊ என்பது தேசிய குடியுரிமைப் பதிவேடு. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், தமிழ் மண்ணிலே பிறந்த எந்த சிறுபான்மையின மக்களும் பாதிக்கப்பிற்குள்ளாக மாட்டார்கள், இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மாண்புமிகு பிரதமர் அவர்களும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். வேண்டுமென்றே சில எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசியல் லாபத்திற்காக அவதூறான செய்தியை, இன்றைக்கு சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தும் வகையிலே இப்படிப்பட்ட செய்திகளை வெளியிட்டு, அதனால் சிறுபான்மையின மக்கள் அச்சப்பட்டிருக்கின்றார்கள். சூஞசு, சூசுஊ எல்லாம் எப்படி எடுக்கிறார்கள் என்பதையெல்லாம் விளக்கமாக, தெளிவாக சட்டமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றது. தமிழகத்தில் வாழ்கின்ற எந்த ஒரு சிறுபான்மையின மக்களும் அச்சப்பட வேண்டியதில்லை, அவதூறான செய்தியை நம்ப வேண்டியதில்லை. கேள்வி: தேசிய மக்கள் கணக்கெடுப்பை அவர்களது கூட்டணிக் கட்சியில் இருக்கும் பீகார் முதலமைச்சர் மறுத்திருக்கிறார்... பதில்: இதில் இந்தப் பிரச்சினை இருக்கிறது, அந்தப் பிரச்சினை இருக்கிறது என்று ஒவ்வொருவரும் சொன்னால் அதற்கு எப்படி விளக்கம் சொல்ல முடியும். அதில் என்ன குற்றச்சாட்டு என்று தெளிவுபடுத்தினால், அதற்கு அரசு பரிகாரம் செய்யும். தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் எந்த ஒரு சிறுபான்மையின மக்களும் பாதிக்கப்பட மாட்டார்கள், 5 அவர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்று சட்டமன்றத்திலேயே எங்களுடைய கழகத்தின் சார்பாகவும், அதேபோல அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கின்ற திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள், நானும் சட்டமன்றத்திலே தெளிவுபடுத்தியிருக்கிறேன். இதை வேண்டுமென்றே ஊடக நண்பர்களும், பத்திரிகை நண்பர்களும் கேள்வி கேட்பது, பத்திரிகையில் வெளிவருவது, எதிர்க்கட்சிகள் பேசுவது, இது தேவையற்ற ஒரு பதற்றத்தை உண்டாக்குகின்ற செயலாகத்தான் நான் கருதுகின்றேனே தவிர, தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், எந்த சிறுபான்மையின மக்களும் குறிப்பாக இஸ்லாமியர்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். கேள்வி: தமிழகத்தில் அமலுக்கு வந்துவிட்டதா? பதில்: இல்லை.

கேள்வி: திரு.அன்வர் ராஜா ...

பதில்: எல்லா பத்திரிகைகளிலும் நேற்றே அறிக்கை வந்துவிட்டதே. இனிமேல் ஊடகத்திலும், பத்திரிகைகளிலும் யாரும் செய்தி வெளியிடக்கூடாது என்று தலைமைக் கழகம் தெளிவுபடுத்தியுள்ளது. தன்னுடைய கருத்துக்களை பகிரங்கமாக ஊடகங்களிலோ, பத்திரிகைகளிலோ அல்லது ஊடகத்தின் விவாதத்திலோ கலந்து கொண்டு தவறான கருத்தைச் சொல்லக்கூடாது. தலைமை தான் அனைத்து முடிவுகளும் எடுக்கும்.

கேள்வி: தொடர்ந்து பொன் ராதாகிருஷ்ணனும், அன்புமணி ராமதாசும் கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுக அரசை விமர்சனம் செய்து கொண்டு வருகிறார்களே...

பதில்: மரியாதைக்குரிய அன்புமணி ராமதாஸ், எம்.பி. அவர்கள் எங்கேயும் விமர்சனம் செய்யவில்லை. கேள்வி: இந்த ஆட்சி நீடிப்பதற்கே நாங்கள் தான் காரணம் என்று ... பதில்:அதாவது, அவருடைய கட்சியின் தொண்டர்களை ஊக்குவிக்க வேண்டும். எல்லா கட்சிகளுக்கும் அந்தந்த கட்சி, அதன் நிர்வாகிகள், அதன் தொண்டர்கள் தான் முக்கியம் என்ற அடிப்படையில் அந்தக் கருத்தை பேசியிருக்கின்றார். ஏனென்றால், எல்லோரும் தலைவராக வேண்டும், ஒன்றிய கவுன்சிலர் ஆக வேண்டும், மாவட்ட கவுன்சிலர் ஆக வேண்டும் என்று ஆவலோடு இருக்கின்றபொழுது, கூட்டணி வரும்பொழுது சில இடங்களை விட்டுக் கொடுக்கவேண்டிய சூழ்நிலை இருக்கின்றது, அந்த சூழ்நிலையில், அங்கு இருக்கின்ற அந்தந்த கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் சோர்வடைகிறார்கள். அந்த சோர்வை போக்குவதற்காக சில கருத்துக்களைச் சொல்லி அவர்களிடத்தில் ஒரு நல்ல எண்ணத்தை உருவாக்குவது தான் ஒரு கட்சித் தலைவருக்கு அழகு. அந்த அடிப்படையில் அவர் பேசியிருக்கிறார். கேள்வி: திரு.வில்சன் அவர்களை சுட்டுக் கொன்றவர்கள் தொடர்பாக தகவல் வந்ததா? பதில்:இன்னும் முழுமையாக வரவில்லை. முழுமையாக கிடைத்த பிறகு தகவல் சொல்கிறேன்.

கேள்வி: மத்திய அரசு அலுவலகங்களில் ஹிந்தி பயன்பாடு குறித்து நாடாளுமன்றக்குழு இந்த பொங்கல் நாளில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்களே, அது பற்றி...

பதில்:இதுபோன்று எங்களுக்கு எந்தவித தகவலும் வரவில்லை. நாங்கள் நாளைக்கு விடுமுறை விட்டுவிட்டோமே. 

கேள்வி: திரு.ஸ்டாலின் அவர்கள் சொல்லியிருக்கிறாரே?

பதில்: அவர் எந்த காலத்தில் சொல்லாமல் இருந்தார்? இந்த அரசுக்கு ஏதாவது இடையூறு செய்ய வேண்டும், மக்களிடத்தில் ஏதாவது ஒரு தவறான செய்தியை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம், அது எதுவும் பலிக்கவில்லை. இந்த ஆட்சிக்கு எவ்வளவு இடையூறு செய்யவேண்டுமோ அவ்வளவு இடையூறு செய்து கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா வழியிலே சிறப்பான முறையில் நாங்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் இன்றைக்கு பெரும்பாலான துறைகளில் தேசிய விருதுகளைத் பெற்றிருக்கின்றோம், தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு தமிழகம் முதன்மை மாநிலம் என்ற அளவிற்கு நம்முடைய நிர்வாகத் திறமை இருக்கின்ற காரணத்தினாலே மத்திய அரசிடமிருந்து, அந்த விருதையெல்லாம் நாம் பெற்றிருக்கின்றோம். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் மட்டும் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார். எங்களைப் பொறுத்தவரை, மக்கள் தான் எஜமானர்கள், மக்கள் தான் நீதிபதிகள், அவர்களுடைய எண்ணப்படிதான் எங்களுடைய ஆட்சி நடைபெறும். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை என்று கூறி, இங்கு வந்திருக்கின்ற ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு எனது மனமார்ந்த தைப் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

CFCM