X Close
X
8825830932

முதலமைச்சர் எடப்பாடி மு பழனிசாமி அவர்கள் பங்கேற்று அரசு பொருட்காட்சியை திறந்து வைத்து பேருரை ஆற்றவுள்ளார்


Salem:

August 4

 இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.அ.ராமன், அவர்கள் தெரிவித்ததாவது: சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் அரசு பொருட்காட்சி – 2019 தொடக்க விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு.பழனிசாமி அவர்கள் பங்கேற்று, அரசு பொருட்காட்சியை தொடங்கிவைத்து, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாப்பேருரை ஆற்றவுள்ளார்கள்.

இவ்விழாவிற்கு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்கள் தலைமை ஏற்கவுள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு.பழனிசாமி அவர்கள் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி தானத்தில்நடைபெறும் அரசு பொருட்காட்சி தொடக்க விழா நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, பள்ளிக்கல்வித்துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பொது சுகாதாராம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் மூலம் ரூ.13.00 கோடி மதிப்பீட்டில் 19 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும்,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), பள்ளிக்கல்வித்துறை, வனத்துறை, கூட்டுறவுத்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, மகளிர் திட்டம், வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மைத்துறை, ற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளின் மூலம் ரூ.17.96 கோடி மதிப்பீட்டில் 11,571 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாப்பேருரை ஆற்றவுள்ளார்கள்.

மேலும், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடத்தப்படவுள்ள அரசு பொருட்காட்சியில் அரசின் கொள்கைகள், மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி-மக்கள் தொடர்புத் துறை, சுற்றுலாத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத் துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை, தோட்டக்கலைத் துறை, பொதுப் பணித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிக் கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கைத்தறி மற்றும் கதர் கிராமத் தொழில் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சுற்றுச்சூழல் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டார், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மீன்வளத்துறை மற்றும் பேரூராட்சிகள் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 27 அரசுத்துறை அரங்குகளும், மேலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், கிராம கைத் தொழில் வாரியம், ஆவின், சேலம் மாநகராட்சி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட 7 அரசு சார்பு நிறுவனங்களும் அரங்குகள் அமைக்கபட்டுள்ளன. இப்பொருட்காட்சி தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறவுள்ளது.

மக்கள் தினமும் வந்து மகிழ்வுரும் வகையில் ராட்டினம் மற்றும் டோரா டோரா போன்ற விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி சார்பில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் மாலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் திரைப்பட மற்றும் நாடக நடிகைகளைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் பொருட்காட்சிக்கு வருகை தந்து அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை கண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.அ.ராமன், அவர்கள் தெரிவித்துள்ளார்.

CFCM News

(Centre for Community Media)

Please like and share on https://facebook.com/OnlineSalem

CFCM