August 8
குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது. தமிழக அரசு விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிகள் கிராம ஊராட்சிகள் மற்றும் அனைத்து பேரூராட்சிகளிலும் வழங்கிட அறிவித்துள்ளது.
இத்திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் (2019-20) ஒவ்வொரு பெண் பயனாளிக்கும் 25 எண்ணம் அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பயனாளிகள் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மக்கள் பங்கேற்புடன் கண்டறியப்பட்ட ஏழைகளின் பட்டியல் எண் உடைய பெண்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவர் தேர்வு செய்யப்பட வேண்டும். முந்தைய நிதி ஆண்டுகளில் விலையில்லா கறவைப் பசு வெள்ளாடு செம்மறியாடு கோழி வழங்கும் திட்டத்தின் பயனாளிகளாக இல்லாதவர் தேர்வு செய்யப்பட வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட பெண்களுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். கிராம ஊராட்சியைச் சேர்ந்த பயனாளிகளில் 30 சதவீதத்தினர் கட்டாயமாக ஆதிதிராவிடர் / பழங்குயினர் இனத்தை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தலா 500 பயனாளிகள் வீதம் 20 ஊராட்சி ஒன்றித்திற்கும் ஆக மொத்தம் 10,000 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பேரூராட்சி பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகள் வறுமைக்கோட்டிற்கு கீழ் (க்ஷஞடு) உள்ள பெண் பயனாளிகளாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலின் எண் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
பேரூராட்சி பகுதிகளில் 5 சிறப்பு நிலை பேரூராட்சிகளில் தலா 50 பயனாளிகள் வீதம் 250 பயனாளிகளும் , 11 தேர்வு நிலை பேரூராட்சிகளில் 75 எண்ணம் வீதம் 825 பயனாளிகளும், ஐ ஆம் தரமுள்ள 13 பேரூராட்சிகளில் 107 வீதம் 1391 பயனாளிகளும், ஐஐ ஆம் தரமுள்ள 4 பேரூராட்சிகளில் 125 வீதம் 500 பயனாளிகளும் ஆக மொத்தம் 2966 பயனாளிகள் பேரூராட்சி பகுதியில் தேர்வு பெற உள்ளனர்.
மேற்கண்ட விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற கிராம ஊராட்சிகளில் ஏழைகளின் பட்டியல் ஞஐஞ எண்ணுடனும், பேரூராட்சி பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள (க்ஷஞடு) பட்டியல் எண்ணுடனும் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் மூலமாக 20.08.2019-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன்,அவர்கள் தெரிவித்துள்ளார்.
CFCM News
(Centre for Community Media)