July 30
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளான தமிழ் மாதம் ஆடி 18 ம் நாளை முன்னிட்டும் மற்றும் ஆடி 18 ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டும் 03.08.2019 சனிக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.அ.ராமன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது. சேலம் மாவட்டம், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளான தமிழ் மாதம் ஆடி 18 - ம் நாளை முன்னிட்டும் மற்றும் ஆடி-18 ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டும் சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் 03.08.2019 (சனிக்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881 ன் கீழ் வராது என்பதால் அரசுப்பாதுகாப்புக்கான அவசர அலுவலர்கள் கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். மேலும், 03.08.2019 ஆம் தேதி சனிக்கிழமை அரசு விடுமுறை தினமாக உள்ளதால் அதற்கு ஈடான பணி நாளாக வேறு நாளினை அறிவிக்க தேவையேற்படவில்லை. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.அ.ராமன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
CFM News
(Centre for Commmunity Media)