X Close
X
8825830932

இன்ஜினியரிங் படித்த மாணவனை கொலை முயற்சி: கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என சேலம்டிஐஜி இடம் புகார்-


87108-65dcafdb-ea4f
Salem:

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா சிந்தாமணியூர் பகுதியைச் சேர்ந்த சின்ன கவுண்டர் மகன் பெருமாள். இவரது மகன் கார்த்திக் இன்ஜினியரிங் படித்து உள்ளார்.

கடந்த 23ஆம் தேதி சிந்தாமணியூர் பஸ் ஸ்டாப்பில் உள்ள ஒரு பேக்கரி டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜோதி மகன் சபரீஸ்வரன் என்பவர் கார்த்திக்கிடம் வந்து இங்கு டீ குடிக்க வரக்கூடாது. செல்போனில் படம் பார்க்க கூடாது என மிரட்டியுள்ளார்.

இதில் வாக்குவாதம் ஏற்பட்டு கார் திக் இன் தலையில் பலமாக தாக்கியுள்ளார். மேலும் சுடு பாலை ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் . இதில் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் படுகாயமடைந்த கார்த்திக் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மேச்சேரி போலீசில் புகார் கொடுத்தபோது சபரீஸ்வரன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யாமல் சாதாரண வழக்காக பதிவு செய்துள்ளனர். கொலை முயற்சியில் கைது செய்யாமல் வெளியே நடமாட வைத்துள்ளனர்.  நான் பெரிய ரவுடி என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டும் தொனியில் சபரீஸ்வரன் பேசி வருவதால் அக்கம்பக்கத்தினர் வெளியில் நடமாட முடியாதபடி வீட்டிலேயே கிடைக்கின்றனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுக்கப்பட்டது. இன்ஜினியரிங் படித்த மாணவனை கொலை செய்ய யும் முயற்சி நோக்கத்தோடு கடுமையான வழக்கு சட்டத்தின் கீழ் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என 50க்கும் மேற்பட்டோர் சேலம் சரக டிஐஜி இடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.

CFCM News

(Centre for Community Media)

CFCM