February 5
சர்வதேச டேக்வான்டோ போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற சேலம் மாவட்டத்தை சார்ந்த மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ரோஹிணி ரா.பாஜிபாகரே,அவர்களை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (05.02.2018) சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ஜனவரி 27 மற்றும் 28ம் தேதிகளில் கோவா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சர்வதேச டேக்வான்டோ போட்டிகளில் ஒன்பது நாடுகள் சார்ந்த 700க்கும் மேற்பட்ட வீர வீராங்களைகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகளில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் வீரலட்சுமி வித்யாலயா உயர்நிலைப்பள்ளி மாணவன் கார்த்திகேயன், நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த மாணவி காவியா மற்றும் 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் செங்குந்தர் மெட்ரிக் பள்ளி மாணவி இஜாஸ் பக்மிதா, ஏ.ஆர்.ஆர்.எஸ் பள்ளி சார்ந்த மாணவன் விஜய்கிருஷ்ணா, ஹோலிகிராஸ் பள்ளியை சார்ந்த மாணவன் நிதீஸ்வரன் சர்வதேச டேக்வான்டோ போட்டியில் தங்கம் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
போட்டியில் தங்க பதக்கம் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும், இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் அனைவரும் ஏப்ரல் மாதம் தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரோஹிணி ரா.பாஜிபாகரே, இ.ஆ.ப., அவர்கள் தனது வாழ்த்தினை தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஞானகௌரி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
CFCM News
(Centre for Community Media)