X Close
X
8825830932

முனெச்சரிக்கை நடவடிக்கையாக சேலத்தில் முப்பதுக்கும் மேறபட்ட ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர்-


87108-632b4bcf-94be
Salem:

April 26.

சேலம் மாநகர் பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும் பொதுமக்கள் அச்சம் இன்றி வாழவும் மாநகர காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் இதனடிப்படையில் கடந்த சில மாதங்களாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகள் போக்கிரிகள் மற்றும் பழைய குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.

இதனடிப்படையில் சேலம் மாநகர காவல்துறையினர் நேற்று இரவு மேற்கொண்ட அதிரடி சோதனையில் மாநகர பகுதியில் சுற்றித்திரிந்த சித்துராஜ், பல்லு மணி என்கிற மணிகண்டன், பூபதி, விக்னேஷ், பூபாலன், ராஜ்கிரண், கணேசன் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட ரவுடிகள் அதிரடியாக கைது செய்யபட்டனர் கொலை கொள்ளை வழிப்பறி மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தல் போன்ற பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்ட இவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது அந்தந்த காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் சேலம் மாநகரம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது இதில் தொடர் குற்றவாளிகளாக இருந்து வரும் ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவும், ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளை பதிவு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மாநகர பகுதிகளில் ரவுடிகள் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் கைது செய்யப்பட்டு அவர்கள் மத்திய சிறையில் அடைப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. சேலத்தில் ஒரே சமயத்தில் 30க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செயப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

CFCM News

CFCM