X Close
X
8825830932

சேலத்தில் திருவையாறு நிகழ்ச்சி நானூறுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடினர்


87108-f30dd991-d79f
Salem:

May 5

 சேலத்தில் பதினான்காம் ஆண்டு திருவையாறு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதில் நானூறுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டுபஞ்சரத்ன கீர்த்தனைகள் பாரம்பரியமிக்க வீணை, மிருதங்கம் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகளாலும் இசைஅமைத்து வாய்ப்பாட்டு பாடி மகிழ்ந்தனர்..... நவீன காலத்தில் பாரம்பரிய இசையை இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள திருவையாறு இசை நிகழ்ச்சி உதவியாக இருக்கும் என்றும் பெருமிதம்....

சேலத்தில்  ஸ்ரீ தியாகராஜரின் நூற்றி எழுபத்தி இரண்டாம் ஆராதனை விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. சத்குரு ஸ்ரீ தியாகராஜரின் ஆராதனை விழாவை முன்னிட்டு சேலத்தில் திருவையாறு என்ற நிகழ்ச்சி ஆண்டு தோறும் வெகு விமர்சியாக கொண்டாடப் பட்டு வருகிறது.

அதே போல இந்த ஆண்டும் பதினான்காம் வருடமாக சேலத்தில் திருவையாறு நிகழ்ச்சி சேலம் சங்கீத வித்வத் சபா சார்பாக நடைபெற்றது. சேலம் விஜயரகாவச்சரியர் மண்டபத்தில் கடந்த இரண்டாம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சி ஐந்தாம் தேதி நிறைவு பெறுகிறது நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக தியாகராஜ ஆராதனை எனும் பஞ்சரத்ன கீர்த்தனை மற்றும் சத்குருவின் உற்சவ சம்பிரதாய கீர்த்தனைகள் திருவையாறு இசை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான இசை கலைஞர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இசை நிகழ்சிகள் நடத்தினர். முன்னதாக தியாகராஜருக்கு பல்வேறு விதமான வாசனை மலர்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை கான்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வீணை, மிருதங்கம், வயலின், நாதஸ்வரம், உள்ளிட்ட நானூறுக்கும் மேற்ப்பட்ட இசைக்கலைஞர்கள் குழுக்குழுவாக தங்களது இசை கருவியின் மூலம் தியாகராஜர் அவர்களின் பாடல்கள், ஸ்ரீ ராமரின் பக்திப்பாடல்களை பாடி இசை அமைத்தனர்.

அதனை தொடர்ந்து தியாகராஜரின் திருஉருவ படத்திற்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.இந்த சேலத்தில் திருவையாறு நிகழ்ச்சியில் ஏராளமானனோர் கலந்துகொண்டனர் பின்னர் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை சங்கீத வித்வத் சபா வினர் சிறப்பாக செய்திருந்தனர்.

விழாவில் இசை கலைஞர்களும், மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டன்ர். இது குறித்து திருவையாறு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இசை கலைஞர்கள் கூறும்போது நவீன காலத்தில் மேற்கத்திய இசையை இன்றைய சமூதாயத்தினர் ஆர்வம் காட்டி வருகிறனர்.

தமிழர்களின் பாரம்பரிய இசையான வாய்பாட்டு, வயலின், வீணை உள்ளிட்ட பல்வேறு இசையை இன்றைய தலைமுறையினர் கற்றுகொள்ளும் வகையிலும், விழிப்புணர்வு ஏறப்டுத்தும் வகையிலும், இந்த தியாகராஜர் இசை பயனுள்ளதாக இருக்கும் என்றும் உலகம் முழுவதும் பாரம்பரிய இசையை கொண்டு சென்ற பெருமை சத்குரு ஸ்ரீ தியாகராஜரையே சாரும் என்றும் அவருடைய இசையை பாடுவதற்கு சேலத்தில் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று பெருமிதத்தோடு தெரிவித்தார்.

CFCM News

(Centre for Community Media)

CFCM